பள்ளி மாணவர் பகடிவதை! காவல்துறை விசாரணை!

top-news

மே 6,

Subang Jayaவில் உள்ள இடைநிலைப்பள்ளி மாணவரைப் பகடிவதைச் செய்து காயப்படுத்தியதாக 3 இடைநிலைப்பள்ளி மாணவர்கள் மீது பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் புகார் அளித்துள்ளதாக Subang Jaya மாவட்டக் காவல் ஆணையர் Wan Azlan Wan Mamat உறுதிப்படுத்தினார். 14 வயது இடைநிலைப்பள்ளி மாணவர் காயத்துடன் இருக்கும்படியானப் புகைப்படத்தைச் வலைத்தலங்களில் பகிர வேண்டாம் என காவல்துறை வலியுறுத்தியது.

கடந்த ஏப்ரல் 29 பள்ளி வளாகத்தில் 3 மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து 14 வயது சக மாணவரைத் தாக்கியதாகவும் இந்த ஓராண்டில் இது இரண்டாவது முறை என்பதால் பாதிக்கப்பட்ட மாணவரின் 43 வயது தந்தை நேற்றிரவு புகார் அளித்ததாக Subang Jaya மாவட்டக் காவல் ஆணையர் Wan Azlan Wan Mamat தெரிவித்தார். தாக்குதல் நடத்தியதாக நம்பப்படும் சம்மந்தப்பட்ட 3 மாணவர்களிடமும் காவல்துறை விசாரணை நடத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang bapa membuat laporan polis selepas anaknya yang berusia 14 tahun dipukul oleh tiga pelajar di sekolah di Subang Jaya. Ini adalah kali kedua insiden berlaku. Polis sedang menyiasat ketiga-tiga pelajar terbabit.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *