காவல் அதிகாரியைத் தாக்கிய இளைஞர் கைது!

- Sangeetha K Loganathan
- 01 May, 2025
மே 1,
சாலையில் சோதனை நடவடிக்கையிலிருந்த இரு காவல் அதிகாரிகள் மோட்டார் சைக்கிளோட்டியைத் தாக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியது தொடர்பாகக் TAWAU மாவட்டக் காவல் ஆணையர் JASMIN HUSSIN விளக்கமளித்தார். நேற்று காலை 7.50 மணியளவில் TAWAU Jalan Apas சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை இரு காவல் அதிகாரிகள் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கும் போது சம்மந்தப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டியைக் காவல் அதிகாரிகள் நிறுத்தும்படி வலியுறுத்தியும் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் அதே மோட்டார் சைக்கிளோட்டி காலை 10.50 மணிக்குச் சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகளை மோட்டார் சைக்கிளில் மோதும்படி வந்ததால், பணியில் இருந்த இரு காவல் அதிகாரிகளும் 28 வயதுடைய அந்த மோட்டார் சைக்கிளோட்டியைத் தடுத்ததாக JASMIN HUSSIN விளக்கமளித்தார். கைது செய்யப்பட்ட 28 வயது மோட்டார் சைக்கிளோட்டியின் மீது 4 முந்தைய வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் JASMIN HUSSIN தெரிவித்தார்.
Seorang pemuda berusia 28 tahun ditahan selepas didakwa melanggar dua anggota polis dengan motosikal di Jalan Apas, Tawau, ketika sekatan jalan raya. Suspek yang tular di media sosial mempunyai empat kes jenayah lampau dan kini disiasat lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *