சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைய முயன்ற மூவர் கைது!

top-news

ஏப்ரல் 27,

முறையானச் சோதனைகளின்றி சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைய முயன்ற 4 இந்தோனேசியர்களை எல்லை பாதுகாப்பு சிறப்புக் கண்காணிப்பு அமலாக்க ஆணையமான UPKP கைது செய்துள்ளது. சரவாக்கில் சட்டவிரோதக் குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தேசிய குடிநுழைவுத் துறை UPKP எனும் சிறப்புப் படையை அமைத்து சரவாக் இந்தோனேசிய எல்லை பகுதிகளைக் கண்காணித்த வந்த நிலையில் 3 இந்தோனேசியர்களும் ஒரு மலேசியரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 6 மணியளவில் சரவாக்கில் உள்ள லுண்டூ சாலையில் சந்தேகத்திற்குரிய உள்ளூர் ஆடவர் ஒருவரின் வாகனத்தைச் சோதனையிட்டதில் இந்தோனேசியாவைச் சேர்ந்த 2 ஆண்களும் 1 பெண்ணும் சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைந்ததைக் கண்டுப்பிடித்தாகவும் ஒருவருக்குத் தலா RM 250 ரிங்கிட்டைப் பெற்று சம்மந்தப்பட்ட மலேசிய ஆடவர் அவர்களை மலேசியாவுக்குள் கொண்டு வர முயற்சித்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tiga warga Indonesia dan seorang lelaki tempatan ditahan di Sarawak kerana cubaan masuk ke Malaysia secara haram. Mereka dikesan ketika pemeriksaan kenderaan dan dipercayai membayar RM250 seorang untuk diseludup masuk. Kes disiasat pihak berkuasa UPKP.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *