பிச்சை எடுக்கும் இடத்திற்குக் கத்திக் குத்து! ஒருவர் பலி!

top-news

ஏப்ரல் 25,

ஷா அலாமில் உள்ள கடை வீதியில் பிச்சைக்காரர்கள் இருவருக்கிடையில் யார் இந்த பகுதியில்  பிச்சை எடுப்பது என்பது குறித்து ஏற்பட்ட வாக்குவாதம் கத்துக் குத்தானதில் 40 வயது பிச்சைக்காரர் 28 வயதுள்ள மற்றொரு பிச்சைக்காரரால் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் ஷா அலாம் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Iqbal Ibrahim தெரிவித்தார்.

ஷா அலாம் Seksyen 18 இல் உள்ள வங்கியின் முன் நண்பகல் 12 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12.30  மணிக்குக் கொலை செய்த 28 வயது பிச்சைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர் மீது முன்னமே 9 குற்றப்பதிவுகள் உள்ளதாகவும் தேடப்படும் குற்றாவளிகள் பட்டியலில் இருப்பதாகவும் ஷா அலாம் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Iqbal Ibrahim தெரிவித்தார்.

Seorang lelaki berusia 40 tahun maut ditikam dalam perebutan kawasan meminta sedekah di hadapan bank di Shah Alam. Suspek berusia 28 tahun ditahan di lokasi kejadian dan memiliki sembilan rekod jenayah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *