அடையாள அட்டைகளைச் சோதனையிடும் போலி அதிகாரிகள்! மக்கள் விழிப்புடன் இருங்கள்!

top-news

ஏப்ரல் 28,

வீடு வீடாகச் சென்று உள்துறை அமைச்சின் அதிகாரிகள் என கூறி அடையாள அட்டைகளைக் கும்பலொன்று சோதனையிடுவதாகச் சமூகவலைத்தலத்தில் பரப்பப்பட்ட காணொலிக்கும் உள்துறை அமைச்சுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் அம்மாதிரியானக் கும்பலிடமிருந்து பாதுகாப்பாக இருக்கும்படியும் உள்துறை அமைச்சு வலியுறுத்தியது. இது கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பரில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் பதிவுத் துறை அதிகாரிகள் அரசு அலுவலகத்தின் வெளியே குடிமக்களின் அடையாள அட்டையைச் சோதனையிடுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகள் என கூறியபடி வீடு வீடாகச் சென்று அடையாள அட்டையைச் சோதனையிடுவதாகப் புகைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் பதிவுத் துறை அதிகாரிகளிடமிருந்து முறையான விளக்கமில்லாமல் அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டாம் என்றும், எந்தவோர் அரசு அதிகாரிக்கும் அடையாள அட்டையை புகைப்படமோ நகலோ எடுக்க அனுமதியில்லை என்றும் என்றும் உள்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kementerian Dalam Negeri menegaskan bahawa video kumpulan menyamar sebagai pegawai untuk memeriksa kad pengenalan tidak berkaitan dengan mereka. Orang ramai diingatkan agar tidak menunjukkan atau menyerahkan salinan kad pengenalan tanpa pengesahan rasmi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *