போலி வேலை வாய்ப்புகளால் பணம் பறிக்கும் கும்பல் கைது!

top-news

மே 5,

வேலை வாய்ப்புகளை வழங்குவதாகப் போலியான முகவர்களைக் கொண்ட 12 வெளிநாட்டினர்களைப் பேராக் மாநில வணிகக் குற்றப்புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளதாகப் பேராக் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Noor Hisam Nordin இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார். Pasir Putehவில் உள்ள ஓர் ஆடம்பர வீட்டில் கடந்த வெள்ளிக் கிழமை பிற்பகல் 2 மணிக்கு இச்சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதில் முக்கிய ஆவணங்களுடன் சீனா நாட்டைச் சேர்ந்த 10 ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைன் வேலை வாய்ப்புத் திட்டம் முதலீடுகள் போன்ற பல்வேறு வகையில் பணத்தைப் பறிக்க இந்த வீட்டிலிருந்து செயல்பட்டதாகவும் பொருள்களை வாங்குவது விற்பதுமாகப் பல்வேறு மோசடிகளில் இந்த கும்பல் சம்மந்தப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட ஆடம்பர வீட்டிலிருந்து RM36,000 மதிப்புள்ள 10 மடிக்கணினிகளும் 20 கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் பேராக் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Noor Hisam Nordin வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 12 பேரும் சீனா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் 4 நாள்கள் விசாரணைக்காவலில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

Polis Perak menahan 12 warga China termasuk dua wanita kerana terlibat dalam sindiket penipuan pekerjaan dalam talian. Mereka beroperasi dari sebuah banglo mewah di Pasir Puteh dan pelbagai barangan seperti komputer dan telefon dirampas dalam serbuan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *