போலி முதலீட்டில் RM 680,000 இழந்த மூதாட்டி!

top-news

மே 10,

போலி முதலீடு என தெரியாமல் பினாங்கைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி SILVER PEAK CAPITAL எனும் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டதாகப் பினாங்கு மாநிலக் காவல்துறை தலைவர் DATUK HAMZAH AHMAD தெரிவித்தார். முதலீடு செய்த தொகையிலிருந்து 10 முதல் 20 விழுக்காடு லாபத்தை ஒவ்வொரு வாரமும் பெறப்படும் எனும் விளம்பரத்தை முகநூலில் கண்டு முதலீடு செய்ததாகப் பாதிக்கப்பட்ட மூதாட்டி வாக்குமூலம் அளித்துள்ளார். 

கடந்த பிப்ரவரி மாதம் 5 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 7 முறை பணத்தைப் பரிவர்த்தனை செய்ததாகவும் மொத்தமாக RM 680,000 தொகையை இழந்துள்ளதாகவும் பினாங்கு மாநிலக் காவல்துறை தலைவர் DATUK HAMZAH AHMAD தெரிவித்தார். தான் முதலீடு செய்த பணத்துடன் லாபமாகப் பெறவிருந்த பணம் என அதன் மொத்த மதிப்பு RM 11 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

Seorang wanita warga emas berusia 60 tahun dari Pulau Pinang kerugian RM680,000 selepas membuat pelaburan dalam syarikat palsu Silver Peak Capital, yang menjanjikan pulangan mingguan 10 hingga 20 peratus menerusi iklan di Facebook, kata Datuk Hamzah Ahmad.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *