வேன் மோதியதில் இளம் மோட்டார் சைக்கிளோட்டி பலி!

- Sangeetha K Loganathan
- 04 May, 2025
மே 4,
சமிஞ்சை விளக்கை மீறிய வேன் மோட்டார் சைக்கிளை மோதி விபத்துக்குள்ளானதில் 20 வயது இளைஞர் உயிரிழந்தார். இன்று அதிகாலை 12.10 மணிக்குச் சிரம்பானில் உள்ள Senawang செல்லும் சாலையில் இவ்விபத்து நிகழ்ந்ததாகச் சிரம்பான் மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Hatta Che Din தெரிவித்தார்.
கட்டுப்பாட்டை இழந்த வேன் சமிஞ்சை விளக்ககை மீறியதாகவும் விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளும் சமிஞ்சை விளக்கை மீறியிருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சிரம்பான் மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Hatta Che Din தெரிவித்தார். சம்மந்தப்பட்ட 44 வயது வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விபத்தில் பலியான 20 வயது இளைஞரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகச்சிரம்பான் மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Hatta Che Din தெரிவித்தார்.
Seorang penunggang motosikal berusia 20 tahun maut selepas sebuah van melanggar lampu isyarat dan merempuhnya di Senawang awal pagi tadi. Pemandu van berusia 44 tahun telah ditahan untuk siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *