பெரிக்காத்தானின் இன மத அரசியலுக்குத் தோல்வி! – டி.ஏ.பி

- Sangeetha K Loganathan
- 28 Apr, 2025
ஏப்ரல் 28,
பெரிக்காத்தான் கட்சியின் தோல்விக்கு அவர்கள் தொடர்ந்து முன்னெடுக்கும் இன மத வேற்றுமை அரசியல் முக்கிய காரணம் என டி.ஏ.பி கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான Anthony Loke தெரிவித்தார். பாரிசான் பக்காத்தான் கூட்டணி என்பது மக்கள் நலனுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி என்றும் இதில் எந்த கட்சிக்கும் ஆதரவாகவோ, அரசியல் லாபத்திற்காகவே மேற்கொள்ளப்பட்டதல்ல என Anthony Loke வலியுறுத்தினார்.
பாஸ் கட்சியும் பெர்சத்து கட்சியும் குறிப்பிட்ட சமூகத்திற்கானக் கட்சியாக இருப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவர்களின் கட்சியினர் பிற சமூகத்தினரை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதில் தான் பிரச்சனை என்றும் அதனைப் பெரிக்காத்தான் மாற்றிக் கொண்டால் போதுமென Anthony Loke வலியுறுத்தினார். பெரிக்காத்தான் கூட்டணி ஒற்றுமை அரசாங்கத்தை வீழ்த்துவதற்காகச் செயல்படுவதை விடுத்து, மக்கள் நலனுக்காகச் செயல்பட்டால் முக்கிய மாற்றங்களைக் காணலாம் என Anthony Loke தெரிவித்தார்.
Anthony Loke menyatakan kegagalan Perikatan Nasional berpunca daripada politik perkauman dan keagamaan yang berterusan. Beliau menegaskan Pakatan Harapan-Barisan Nasional dibentuk demi kebajikan rakyat dan menyeru Perikatan Nasional menumpukan kepada penyatuan rakyat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *