வணிகத்தில் ஈடுப்பட்ட வெளிநாட்டினர்! கடைகளை இடித்த மாநகர் மன்றம்!

- Sangeetha K Loganathan
- 03 May, 2025
மே 3,
சட்டவிரோதமாக வணிகக் கடைகளை அமைத்து வணிகத்தில் ஈடுபட்ட வெளிநாட்டினர்கள் மூவருக்குச் சொந்தமான 3 வணிகக் கடைகளைப் பினாங்கு மாநகர் மன்றம் இடித்து தரைமட்டமாக்கியது. பினாங்கில் 3 வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் சட்டவிரோதமாக அந்த வணிகக் கடைகள் அமைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததாகப் பினாங்கு மாநகர் மன்றம் தெரிவித்து.
சம்மந்தப்பட்ட வணிகக் கடைகளில் உள்ள அனைத்து பொருள்களையும் பறிமுதல் செய்ததாகவும் 3 வணிகக் கடைகளின் கூடாரங்களை இடித்து தரைமட்டமாக்கப்பட்டதாகவும் பினாங்கு மாநகர் மன்றம் தெரிவித்தது, சட்டவிரோதமாக வணிகத்தில் ஈடுபட்ட வெளிநாட்டினர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களையும் தேடி வருவதாகப் பினாங்கு மாநகர் மன்றம் தெரிவித்துள்ளது.
Majlis Bandaraya Pulau Pinang merobohkan tiga kedai milik warga asing yang menjalankan perniagaan secara haram di tiga lokasi berbeza. Semua barangan dirampas, dan pihak berkuasa sedang mengesan warga asing terlibat yang dikenal pasti.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *