பாரிசான் பக்காத்தான் கூட்டணியில் தேர்தல்! அது தற்கொலை! அக்மால் சாலே எச்சரிக்கை!

top-news

மே 9,

மலாக்கா மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலின் போது பக்காத்தானும் பாரிசானும் கூட்டணி அமைத்து பொதுத்தேர்தலைச் சந்தித்தால் அது தற்கொலைக்குச் சமம் என அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவரும் மலாக்கா Merlimau  சட்டமன்ற உறுப்பினருமான  Datuk Dr Muhamad Akmal Saleh தெரிவித்தார். தற்போது ஒற்றுமை கூட்டணியில் ஒப்பந்தத்தால் இடைத்தேர்தல்களில் மட்டும் குறைந்தபட்ச புரிந்துணர்வின் அடிப்படையில் பக்காத்தானும் பாரிசானும் கூட்டணியாகப் போட்டியிட்டு வருவதாகவும் இது பொதுத்தேர்தலில் நீடிக்காது என்றும் முக்கியமாக மலாக்காவில் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை என்றும்  Datuk Dr Muhamad Akmal Saleh திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

கடந்த மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் பல்வேறு சட்டமன்றங்களில் பக்காத்தானுக்கும் பாரிசானுக்கும் நேரடி போட்டி நிலவிய நிலையில் தொகுதிப் பங்கீட்டில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கவிருக்கும் என Datuk Dr Muhamad Akmal Saleh தெரிவித்தார். மலாக்காவில் பாரிசான் வலுவாக இருக்கிறது, காரணம் கடந்த மாநிலங்கவைச் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 28 சட்டமன்றங்களில் பாரிசான் 21 சட்டமன்றங்களை வென்றுள்ளது. பக்காத்தான் 5 சட்டமன்றங்களை வென்றுள்ளது, பெரிக்காத்தான் 2 சட்டமன்றங்களை வென்றுள்ளதை Datuk Dr Muhamad Akmal Saleh நினைவூட்டினார்.

Datuk Dr Muhamad Akmal Saleh menyifatkan kerjasama antara Barisan Nasional dan Pakatan Harapan dalam pilihan raya negeri sebagai tindakan yang membahayakan, sambil menegaskan gabungan itu tidak akan berlaku di Melaka kerana isu pembahagian kerusi dan kekuatan Barisan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *