PKR தேசிய தேர்தலுக்கு 237 பேர் வேட்பு மனு தாக்கல்!

- Sangeetha K Loganathan
- 09 May, 2025
மே 9,
இன்று மாலை 4 மணி வரையில் பி.கே.ஆர் கட்சியின் தேசிய பொறுப்புகளுக்கானத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தம் 237 வேட்பு மனு தாக்கல் பெறப்பட்டுள்ளதாகக் கட்சியின் தேர்தல் குழு தலைவர் Datuk Seri Dr Zaliha Mustafa தெரிவித்தார். நேற்று முதல் தொடங்கிய வேட்பு மனு தாக்கல் இன்று இரவு 11.59 மணிக்கு முடிவடையும் என அவர் தெரிவித்தார். இயங்கலையின் மூலமாக இந்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதால் எந்தவொரு இயங்கலை தடங்களும் ஏற்படாதவாறு தேர்தல் குழு கண்காணிப்பதாகவும் Datuk Seri Dr Zaliha Mustafa தெரிவித்தார்.
பி.கே.ஆர் கட்சிக்கானத் தலைவர் பதவிக்கு நடப்புத் தலைவரும் பிரதமருமான Datuk Seri Anwar Ibrahim வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதை Datuk Seri Dr Zaliha Mustafa உறுதிப்படுத்தினார். மேலும் பி.கே.ஆர் கட்சிக்கானத் துணைத் தலைவர் பொறுப்புக்கு இதுவரையில் நடப்புத் துணைத் தலைவர் Datuk Seri Rafizi Ramli-யும் முன்னாள் உதவித் தலைவரும் அன்வாரின் மகளுமான Nurul Izzah Anwar-உம் வேட்பு மனுத்தாக்கல் செய்திருப்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். பி.கே.ஆர் கட்சியின் தேர்தல் 24 மே நடத்தப்படும் நிலையில் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் மே 15 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என கட்சியின் தேர்தல் குழு தலைவர் Datuk Seri Dr Zaliha Mustafa தெரிவித்தார்.
Sebanyak 237 pencalonan diterima bagi pelbagai jawatan MPP PKR setakat tengah hari. Anwar Ibrahim sah pertahan jawatan presiden, manakala persaingan tumpuan kini pada jawatan timbalan presiden antara Nurul Izzah dan Rafizi Ramli.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *