மரம் விழுந்ததில் 2 வாகனங்கள் சேதம்! – BANGSAR!

- Sangeetha K Loganathan
- 08 May, 2025
மே 8,
தலைநகரில் பெய்த கனமழையால் பங்சார் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மரம் விழுந்ததில் 2 வாகனங்கள் சேதமடைந்தாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது. இன்று நண்பகல் 3.30 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு 5 பாதுகாப்பு மீட்பு அதிகாரிகளுடன் விரைந்ததாகக் கோலாலம்பூர் மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ramli Mohd தெரிவித்தார்.
மரம் விழுந்ததில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் இரண்டும் சேதமடைந்ததாகவும் கிளைகள் சாலையில் சிதறியதால் சம்மந்தப்பட்ட சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது, சம்பவத்தின் போது வாகனத்தில் யாரும் இல்லாததால் எந்தவோர் உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றும் Perodua Myvi , Mitsubishi Triton எனும் 2 வாகனங்களும் மிகுந்த சேதத்தை எதிர்நோக்கியதாகவும் அவர் தெரிவித்தார். மாலை 4.38 மணிக்குத் துப்புரவு பணிகள் நிறைவடைந்து முழுமையாக செயல்பாட்டுக்கு வந்ததாகக் கோலாலம்பூர் மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ramli Mohd தெரிவித்தார்.
Hujan lebat di Bangsar menyebabkan sebatang pokok tumbang menimpa dua kenderaan yang diparkir di tepi jalan. Tiada kecederaan dilaporkan, namun Perodua Myvi dan Mitsubishi Triton mengalami kerosakan teruk. Laluan kembali pulih selepas kerja pembersihan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *