லஞ்சம் பெற்றதாகக் காவல் அதிகாரிகள் இருவர் கைது!

- Sangeetha K Loganathan
- 29 Apr, 2025
ஏப்ரல் 29,
சிரம்பானில் போக்குவரத்துக் குற்றப்புலனாய்வுத் துறையினர் மேற்கொண்ட சோதனையின் போது வாகனமோட்டியிடமிருந்து லஞ்சம் பெற்றதாக நம்பப்படும் இரு காவல் அதிகாரிகள் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டனர். நேற்று நண்பகல் 1 மணிக்கு ஒரு காவல் அதிகாரியும் பிற்பகல் 3 மணிக்கு மற்றொரு காவல் அதிகாரியும் கைது செய்யப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் Awgkok Ahmad Taufik Putra தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இருவரையும் 5 நாள்கள் விசாரணைக் காவலில் தடுத்து வைக்கும்படி Majistret நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. கடந்த ஞாயிற்றுக் கிழமை சிரம்பானில் உள்ள சாலையில் சோதனை நடவடிக்கையின் போது இரு காவல் அதிகாரிகளும் வாகனமோட்டியிடமிருந்து RM6,000 வரையில் லஞ்சமாகப் பெற்றதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்திற்குத் தகவல் கிடைத்ததும் சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகள் இருவரையும் கைது செய்துள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் Awgkok Ahmad Taufik Putra தெரிவித்தார்.
Dua pegawai polis trafik ditahan SPRM di Seremban kerana disyaki menerima rasuah sehingga RM6,000 semasa operasi jalan raya. Mahkamah Majistret telah mengarahkan mereka direman selama lima hari untuk membantu siasatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *