சட்டமன்ற உறுப்பினரிடமிருந்து துப்பாக்கியைப் பறிமுதல் செய்த காவல்துறை!

top-news

ஏப்ரல் 29,

கட்சித் தேர்தலின் போது கட்சி உறுப்பினர்களிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக நம்பப்படும் Hulu Kinta சட்டமன்ற உறுப்பினர் Muhamad Arafat Varisaiயிடமிருந்து துப்பாக்கியைப் பறிமுதல் செய்துள்ளதாகப் பேராக் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Noor Hisam Nordin தெரிவித்தார். Hulu Kinta சட்டமன்ற உறுப்பினரிடமிருந்து Kimber Micro 9 ESV ரக துப்பாக்கியைக் காவல்துறை பறிமுதல் செய்துள்ளதாகவும் துப்பாக்கியைக் கொண்டிருக்க முறையான அனுமதியை அவர் கொண்டிருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கொண்டிருக்கும் எந்தவொரு தனிநபரும் புக்கிட அமான் துப்பாக்கி உரிம ஆணையத்திடம் அனுமதி பெற்று துப்பாக்கியை வைத்திருக்கலாம் என்றாலும் அதனைப் பொது இடங்களில் பயன்படுத்த கூடாது என்றும் வீட்டிலிருந்து துப்பாக்கியை வெளியே எடுத்து செல்லும் முன்னர் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் பேராக் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Noor Hisam Nordin தெரிவித்தார். Hulu Kinta சட்டமன்ற உறுப்பினர் Muhamad Arafat Varisai இந்த விதிகளை மீறியதால் அவரிடமிருந்து துப்பாக்கியைப் பறிமுதல் செய்ததாகவும் அவரின் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமத்தை ரத்து செய்யும்படியும் புக்கிட் அமானுக்கு வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும் பேராக் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Noor Hisam Nordin தெரிவித்தார்.

Polis merampas sepucuk pistol daripada ADUN Hulu Kinta, Muhamad Arafat Varisai, selepas beliau didakwa mengugut ahli parti lain dengan senjata semasa pilihan raya. Beliau memiliki lesen sah, namun melanggar peraturan penggunaan senjata di tempat awam.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *