Ayer Kuning இடைத்தேர்லில் வாக்கு எண்ணிக்கை சரிவு!

- Sangeetha K Loganathan
- 27 Apr, 2025
ஏப்ரல் 27,
நேற்று நடைபெற்ற AYER KUNING சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை மனநிறைவளிக்கும் வகையில் இல்லை என தேர்தல் ஆணையமான SPR கருத்து தெரிவித்துள்ளது. AYER KUNING சட்டமன்ற இடைத்தேர்தலில் Barisan Nasional வேட்பாளர் 11,065 வாக்குகள் பெற்று 5006 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றிப் பெற்றிருக்கும் நிலையில் 58.07 % வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணைய இயக்குநர் DATO SRI RAMLAN BIN HARUN தெரிவித்தார்.
மொத்தம் 31,897 வாக்காளர்களைக் கொண்டிருக்கும் ஆயேர் கூனிங் சட்டமன்றத்தில் 18,523 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. பாரிசான் வேட்பாளர் 11,065 வாக்குகளும் பெரிக்காத்தான் வேட்பாளர் 6,059 வாக்குகளும் PSM வேட்பாளர் 1,106 வாக்குகளும் பெற்றுள்ளதாகவும் 70% வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 58.07% மட்டுமே வாக்குகள் பதிவாகியுள்ளது. மக்களிடம் உள்ள வாக்குரிமைக்கானக் கடமையாற்ற மேலும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது.
Pilihan raya kecil Ayer Kuning mencatat kadar keluar mengundi hanya 58.07%. Barisan Nasional menang dengan majoriti 5006 undi. SPR kecewa dengan peratusan rendah dan menyeru usaha meningkatkan kesedaran tentang pentingnya menunaikan hak mengundi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *