பி.கே.ஆர் தேர்தலில் முறைகேடு! 190 புகார்கள்!

- Sangeetha K Loganathan
- 07 May, 2025
மே 7,
நடந்து முடிந்த பி.கே.ஆர் கட்சியின் தொகுதித் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகிய நிலையில் மொத்தம் 190 புகார்கள் கிடைக்க பெற்றதாக பி.கே.ஆர் கட்சியின் துணைத்தலைவர் Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார். புகார் அளித்தவர்கள் அனைவரும் கட்சி உறுப்பினர்கள் என்பதால் அதைத் தீர்க்க வேண்டிய கடமை தனக்கு இருந்ததால் 4 நாள்கள் விடுப்பு எடுத்தேன் என Datuk Seri Rafizi Ramli தனது விடுமுறைக்கான விளக்கத்தை அளித்தார்.
மேலும் இந்த இந்த புகார்களை முறையாகவும் சுமூகமாகவும் தீர்க்க வேண்டும் என்றால் அமைச்சராகத் தாம் இந்த பிரச்சனைகளில் ஈடுபட கூடாது என்பதால் 4 நாள்கள் அமைச்சர் பதவியில்லாமல் தாம் கட்சி வேலைகளில் ஈடுப்பட்டதாக அவர் தெரிவித்தார். அமைச்சராக இந்த பிரச்சனைகளுக்கானத் தீர்வை நான் வழங்கியிருந்தால் அது அதிகார மீறலாகியிருக்கும் என்பதால் கட்சியின் துணைத் தலைவராக மட்டுமே இந்த பிரச்சனையைத் தீர்க்க விரும்பியதாகவும் Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார்.
Datuk Seri Rafizi Ramli menerima 190 aduan berkaitan salah laku dalam pemilihan cabang PKR. Demi menyelesaikan isu secara telus, beliau mengambil cuti empat hari daripada tugas menteri dan menangani aduan tersebut sebagai pemimpin parti sahaja.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *