கட்சிப் பொறுப்பும் வேண்டும்! அமைச்சர் பொறுப்பும் வேண்டும்! - Rafizi Ramli

top-news

மே 7,


பி.கே.ஆர் கட்சியின் துணைத்தலைவர் பதவிக்குக் கடுமையானப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிச்சயம் கடுமையானப் போட்டியாக அது இருக்கும் என பி.கே.ஆர் கட்சியின் நடப்புத் துணைத் தலைவரும் பொருளாதார அமைச்சருமான Datuk Seri Rafizi Ramli தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் இருக்கும் நானும் Datuk Seri Saifuddin Nasution Ismail-உம் கட்சியின் உயர் தலைமை பொறுப்புகளை வகித்தாக வேண்டும் என்பதை இருவருமே உணர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனால் போட்டியா இல்லையா என்பது நாளை முதல் நடைபெறவிருக்கும் வேட்புமனு தாக்கலில் தான் தெரியும் என Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார்.

இதுவரை 4 முறை இது குறித்து அன்வாரிடமும் சைபுடீனிடமும் பேசியதாகவும் உண்மையில் கட்சியின் கட்டமைப்பில் தாம் அதிக கவனம் செலுத்த விரும்புவதாகவும் அமைச்சரவை பொறுப்புகளில் நாட்டமில்லை என்றும் தெரிவித்த Datuk Seri Rafizi Ramli, அமைச்சரவை பொறுப்புகளை விடவும் கட்சியின் பொறுப்புகள் மட்டும் தமக்கு போதுமெனும் மனநிலையில் தாம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். போட்டி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது கட்சியின் நலனையும் கட்சியின் எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியதாகவே இருக்கும் என Datuk Seri Rafizi Ramli விளக்கமளித்தார்.

Datuk Seri Rafizi Ramli menyatakan keinginannya untuk terus memegang jawatan dalam kepimpinan tertinggi PKR walaupun memegang jawatan menteri. Beliau lebih berminat terhadap peranan parti dan menegaskan pertandingan akan mencerminkan kepentingan dan hala tuju PKR.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *