RAFIZ & SAIFUDDIN சந்திப்பு! பி.கே.ஆரின் அடுத்த துணைத் தலைவர் யார்?

- Sangeetha K Loganathan
- 22 Apr, 2025
ஏப்ரல் 22,
எதிர்வரும் மே 24 நடைபெறவிருக்கும் பி.கே.ஆர் கட்சியின் தேசிய பொறுப்பாளர்களுக்கானத் தேர்தலில் நடப்புத் துணைத் தலைவர் Datuk Seri Rafizi Ramliக்கு எதிராக உள்துறை அமைச்சரும் பி.கே.ஆரின் முன்னாள் பொதுச் செயலாளருமான Datuk Seri Saifuddin Nasution Ismail போட்டியிடுவார் என வெளியானச் செய்திகளால் கட்சி உறுப்பினர்கள் குழப்பமடைய வேண்டாம் என Datuk Seri Saifuddin Nasution Ismail கேட்டுக் கொண்டார். Datuk Seri Rafizi Ramli உடன் நேற்று இரவு கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து கலந்துரையாடியதையும் Datuk Seri Saifuddin Nasution Ismail உறுதிப்படுத்தினார்.
இதைச் சச்சரவாகக் காணக்கூடாது. தேர்தலால் பிரிவினைகள் ஏற்பட கூடாது என்பதில் எல்லோரும் உறுதியாக இருக்கிறோம். கட்சியில் பொறுப்பில் இருந்தால் மட்டுமே மக்களுக்கான நலத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்பதில்லை, அரசியலில் மக்களுக்கான நலத்திட்டமே முக்கியமானது. சிரமப்பட்டு வளர்ந்த கட்சி இது. ஒவ்வோர் உறுப்பினர்களின் உழைப்பால் வளர்ந்த கட்சி இது. தேர்தலால் இரு வெவ்வேறு அணியாக ஒடையாது என்பதைத் தாம் முழுமையாக நம்புவதாகவும் பி.கே.ஆரில் RAFIZ அணி SAIFUDDIN அணி என இரு வெவ்வேறு அணிகள் இருப்பதாக வெளிவரும் செய்திகளால் உறுப்பினர்கள் குழம்ப வேண்டாம் என்றும் எல்லோடும் பி.கே.ஆர் தான் என Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார்.
நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், யாரை எதிர்த்துப் போட்டியிடுவது என்பது குறித்து இன்னும் தாம் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை என Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார். ஆனால் என்னுடைய முடிவால் பி.கே.ஆரின் எதிர்காலம் பாதிக்காது என்பதைத் தாம் உணர்ந்து விரைவில் கட்சித் தேர்தல் குறித்தானத் தமது அறிவிப்பை வெளியிடுவதாக Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார்.
Saifuddin Nasution menafikan wujudnya perpecahan dalam PKR walaupun terdapat spekulasi beliau akan bertanding menentang Rafizi Ramli dalam pemilihan parti. Beliau menegaskan bahawa perbincangan telah diadakan dan kepentingan parti harus diutamakan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *