கோயில் வாசலில் வழிப்பறி! ஒருவர் காயம்! காவல்துறை விசாரணை!

top-news

ஏப்ரல் 29,

தலைநகர் Kampung Pandan சாலையில் உள்ள ஒரு கோயில் வாசலில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் 60 வயது மூதாட்டியிடமிருந்து வழிப்பறி செய்யும்படியானக் காணொலி சமூகவலைத்தலத்தில் பரவியதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நட்த்தி வருவதாக Wangsa Maju மாவட்டக் காவல் ஆணையர்  Syahrul Anuar Abdul Wahab தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மூதாட்டி காயங்களின்றி தப்பியதாகவும் கொள்ளையர்களைத் தடுக்க முயன்ற ஆடவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நண்பகல் 2 மணியளவில் Kampung Pandan சாலையில் உள்ள கோயிலில் குடும்பத்துடன் வழிபாடு செய்து விட்டு வாகனத்திலேறும்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிப்பறிச் செய்ததாக பாதிக்கப்பட்ட 60 வயது மூதாட்டி புகார் அளித்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரைக் காவல்துறை அடையாளம் கண்டுள்ளதாகவும் Wangsa Maju மாவட்டக் காவல் ஆணையர்  Syahrul Anuar Abdul Wahab தெரிவித்தார். வழிப்பறியின் போது கூட்டமாகக் குடும்பத்துடன் இருந்ததாலும் இந்த கொள்ளையை நடத்தியிருப்பது பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாகப் பொதுமக்கள் சமூகவலைத்தலத்தில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Dua lelaki menaiki motosikal disyaki meragut rantai leher milik warga emas di hadapan kuil di Kampung Pandan, Kuala Lumpur. Mangsa tidak cedera namun trauma, manakala bapa saudaranya cedera ketika cuba menghalang suspek. Polis kini giat mengesan mereka

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *