சிறுமியை ஆபாசமாகப் புகைப்படம் எடுத்த 48 வயது ஆடவர் கைது!

top-news

ஏப்ரல் 29,

அங்காடிக் கடையில் பள்ளி மாணவியை ஆபாசமாகப் புகைப்படம் எடுத்த 48 வயது உள்ளூர் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காஜாங் மாவட்டக் காவல் ஆணையர் Naazron Abdul Yusof தெரிவித்தார். காஜாங்கில் உள்ள அங்காடிக் கடையில் முன்னாடி நின்றுக் கொண்டிருந்த 16 வயது சிறுமியை ஆடவர் ஒருவர் ஆபாசமாகப் புகைப்படம் எடுப்பதை அறிந்த நபர் ஒருவர் கண்டிக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தலத்தில் பரவியதில் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தாயார் கடந்த வியாழன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் இன்று நள்ளிரவு 48 வயது அந்த நபர் கைது செய்யப்பட்டதாகவும் காஜாங் மாவட்டக் காவல் ஆணையர் Naazron Abdul Yusof தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 48 வயது ஆடவருக்கும் 3 பிள்ளைகள் இருப்பதாகவும் தற்காலிகமாக அவர்கள் உறவினர் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் மேலதிக விசாரணைக்காக அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகக் காஜாங் மாவட்டக் காவல் ஆணையர் Naazron Abdul Yusof தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர் மீதானக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை அல்லது 20,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக முன்னதாகப் பகிரப்பட்ட காணொலியை மீண்டும் பகிர வேண்டாம் என்றும் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமிக்கு அது அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Seorang duda tiga anak ditahan polis selepas disyaki cuba merakam video bawah kain seorang remaja perempuan berusia 16 tahun di pasar raya Bandar Kajang. Suspek, pengawal keselamatan berusia 48 tahun, ditahan selepas dikenal pasti melalui maklumat awam.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *