வீட்டின் பின்னால் மனித எலும்புகள்!

top-news

மே 3,

வீட்டின் பின்பகுதியைச் சுத்தம் செய்துக் கொண்டிருக்கும் போது மனித எலும்புகளைக் கண்டுள்ளதாக 51 வயது முதியவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்மந்தப்பட்ட 51 வயது முதியவரின் வீட்டின் பின்னால் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளின் அருகில் உடைகளும் கண்டெடுக்கப்பட்டதாக Bera மாவட்டக் காவல் ஆணையர் Zulkiflee Nazir தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட ஆடவர் மாலை 4 மணியளவில் இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் சம்மந்தப்பட்ட பகுதியைக் காவல்துறையினர் முழுமையாக ஆய்வு செய்து வருவதாகவும் கடந்த ஜூலை மாதம் 48 வயது நபர் ஒருவர் காணாமல் போன வழக்குடன் இது தொடர்புடையதா என்பதைக் காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் Bera மாவட்டக் காவல் ஆணையர் Zulkiflee Nazir தெரிவித்தார்.

Seorang lelaki berusia 51 tahun menemui rangka manusia dan pakaian berhampiran rumahnya di Bera semasa membersihkan kawasan belakang. Polis menyiasat kemungkinan kaitan dengan kes kehilangan lelaki 48 tahun pada Julai lalu

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *