உள்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாகக் கைது!

top-news

மே 8,

மலேசியர் அல்லாதவரின் குடியுரிமை விண்ணப்பத்தை விரைவுப்படுத்துவதற்காகச் சம்மந்தப்பட்டவரிடமிருந்து லஞ்சம் பெற்றதாக நம்பப்படும் 2 உள்துறை அமைச்சின் அதிகாரிகள் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM இன்று உறுதிப்படுத்தியது. சம்மந்தப்பட்ட 2 அதிகாரிகளுடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெளிநாட்டு ஆடவரின் குடியுரிமையைப் பரிசீலனை செய்யாமல் ஏற்றுக் கொள்ள இந்த லஞ்சம் பெறப்பட்டதாகச் சந்தேகத்தின் அடிப்படையிலேயே 2 உள்துறை அமைச்சின் அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் SPRM ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான விசாரணையைத் தொடர அவர்கள் புத்ராஜெயாவில் உள்ள SPRM அலுவலகத்தை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் SPRM தெரிவித்துள்ளது.

Dua pegawai Kementerian Dalam Negeri ditahan SPRM kerana disyaki menerima rasuah bagi mempercepat permohonan kewarganegaraan seorang bukan warganegara. Mereka bersama seorang lagi individu ditahan untuk siasatan lanjut dan tidak dibenarkan keluar dari pejabat SPRM.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *