RM 360 மில்லியன் நெடுஞ்சாலை கட்டுமான ஊழல்! டத்தோ கைது!

top-news

மே 5,

நெடுஞ்சாலை கட்டுமானப் பராமரிப்பு சம்மந்தப்பட்ட அரசாங்கத்தின் நிதியில் தவறாகக் கணக்குகளைக் காட்டியதாகக் கைது செய்யப்பட்ட டத்தோ ஒருவர் உட்பட மேலும் இருவரையும் மேலதிக விசாரணைக்காக 4 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கும்படி Putrajaya Majistret நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. LEMBAH KLANG நெடுஞ்சாலையின் கட்டுமானப் பராமரிப்பிற்காக வழங்கப்பட்ட நிதியில் சுமார் RM 360 மில்லியன் மதிப்பிலான ஊழல் நிகழ்ந்திருப்பதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் சந்தேகிப்பதால் இந்த தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்மந்தப்பட்ட மூவரின் நிறுவனங்களும் இந்த நெடுஞ்சாலை ஊழலில் சம்மந்தப்பட்டுள்ளதால் நிறுவனத்திற்குச் சொந்தமான முக்கிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கும்படியும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்யப்பட்டிருக்கும் மூவருக்கும் எதிரான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படியும் Putrajaya Majistret நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Seorang Datuk dan dua individu lagi ditahan reman empat hari berhubung kes rasuah pembinaan dan penyelenggaraan lebuh raya Lembah Klang melibatkan dana kerajaan bernilai RM360 juta. Mahkamah Majistret Putrajaya mengarahkan penyerahan dokumen berkaitan untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *