கொள்ளையில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது!

- Sangeetha K Loganathan
- 07 May, 2025
மே 7,
ஜொகூரில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் கும்பலைச் சேர்ந்த 3 உள்ளூர் இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக Kluang, மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh இன்று உறுதிப்படுத்தினார். கடந்த மே 4 ஆம் திகதியன்று உள்ளூர் பெண்மணியிடமிருந்து பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவத்திலும் இவர்கள் சம்மந்தப்பட்டிருப்பதாக Kluang, மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டுள்ள மூவரும் 19 முதல் 23 வயதுக்குற்பட்ட உள்ளூர் இளைஞர்கள் என்றும், கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் மீது முந்தைய குற்றச் சம்பவங்களுக்காகத் தேடப்பட்டு வந்ததாகவும் மூன்றாவது நபர் புதிதாக இந்த கும்பலில் சேர்ந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் methamphetamine போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக Kluang, மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார்.
Tiga remaja tempatan yang disyaki terlibat dalam beberapa kes samun di Kluang telah ditahan. Dua daripada mereka dikehendaki atas kesalahan lampau, manakala seorang lagi ahli baru kumpulan itu disahkan positif dadah jenis methamphetamine.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *