6 நாள்களுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்ட காணாமல் போன இளைஞர்!

- Sangeetha K Loganathan
- 05 May, 2025
மே 5,
உடற்பயிற்சி செய்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய ஆடவரின் உடல் கடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 28 காலை 8 மணியளவில் Taman Benut Jayaவில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறிய அந்த இளைஞர் இன்று Pontian மாவட்டத்தில் உள்ள Pulau Pisang கடல் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டதாக Pontian மாவட்டக் காவல் ஆணையர் Mohammad Shofee Tayib தெரிவித்தார்.
மீனவர் ஒருவர் சடலத்தைக் கண்டு காலை 10.40 மணிக்குக் காவல் நிலையத்திடம் புகார் அளித்ததாகவும் மீட்கப்பட்ட சடலத்தைத் தனது மகன் என காணாமல் போனவரின் பெற்றோர் உறுதிச் செய்திருப்பதாகவும் Pontian மாவட்டக் காவல் ஆணையர் Mohammad Shofee Tayib தெரிவித்தார். சம்மந்தப்பட்ட இளைஞரைக் கடந்த 6 நாள்களாகத் தேடி வந்ததாக Pontian மாவட்டக் காவல் ஆணையர் Mohammad Shofee Tayib தெரிவித்தார்.
Seorang remaja lelaki yang dilaporkan hilang sejak 28 April lalu selepas keluar untuk bersenam ditemui mati lemas di perairan Pulau Pisang, Pontian. Mayatnya dikenalpasti oleh ibu bapanya selepas ditemui oleh seorang nelayan pagi tadi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *