இரண்டாகப் பிளந்த வாகனம்! இளைஞர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 08 May, 2025
மே 8,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மின்கம்பத்தை மோதி விபத்துக்குள்ளானதில் 18 வயது இளைஞர் படுகாயம் அடைந்தார். விபத்தில் வாகனம் இரண்டாகப் பிளந்து நொருங்கியது. இன்று அதிகாலை 4.41 மணிக்கு Jalan Tuaran Bypass சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாகச் சபா மாநில மீட்பு ஆணைய செயல்பாட்டு அதிகாரி Lawrence Matusin தெரிவித்தார்.
விபத்துக் குறித்தான அவசர அழைப்பைப் பெற்றதும் 8 மீட்பு அதிகாரிகள் கொண்ட குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வாகனத்தினுள் சிக்கியிருந்த 18 வயதான வாகனமோட்டியை மீட்டதாகவும் படுகாயம் அடைந்த நிலையில் 18 வயது இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் Lawrence Matusin தெரிவித்தார். இந்த விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் விபத்துக்கானக் காரணத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seorang remaja lelaki berusia 18 tahun cedera parah selepas kenderaan dipandunya hilang kawalan dan merempuh tiang elektrik hingga terbelah dua di Jalan Tuaran Bypass, Sabah. Mangsa diselamatkan pasukan bomba dan dibawa ke hospital.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *