முட்டைக்கான உதவித் தொகையை நிலைநிறுத்துவீர் -அரசாங்கத்திடம் பி.பி.ச. கோரிக்கை!

top-news
FREE WEBSITE AD

ஜார்ஜ்டவுன், மே 2-

ஒரு முட்டைக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை இன்று தொடங்கி 10 சென்னில் இருந்து ஐந்து சென்னுக்கு குறைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இந்த உதவித்தொகை முற்றாக அகற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நாட்டின் அடிப்படை உணவுபொருட்களுக்கான பட்டியலில் முட்டை முதன்மையானது என்பதால், அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு கொள்முதல் மற்றும் சில்லறை வியாபாரிகள் மட்டுமின்றி, பொதுமக்களையும் கலக்கமடையச் செய்துள்ளதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

சந்தையில் முட்டை உற்பத்தித் துறை நிறைவாக இருப்பது மட்டுமின்றி அதன் உற்பத்தி செலவினங்கள் நிலைப்படுத்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்ட பின்னரே, இம்முடிவை எடுத்துள்ளதாக அரசாங்கத் தரப்பினர் நேற்று தெரிவித்திருந்தனர்.

ஆனால், இந்த முடிவு நடுத்தர மக்களையும் வறிய நிலையிலானவர்களையும் பெருமளவில் பாதிக்கக்கூடும்.ஏனெனில், வசதி குறைந்தவர்களின் வீட்டில் முட்டைதான் பெருமளவில் அடிப்படை உணவாக இருக்கும்.
உதவித்தொகை நிறுத்தப்பட்டு விலை உயர்த்தப்பட்டால் இப்போதைய நிலையைக் காட்டிலும் முட்டை வாங்குவற்கு அவர்கள் கூடுதல் பணம் செலவிட வேண்டிய நிலை ஏற்படும் என்று அச்சங்கத்தின் கல்வி, ஆய்வுப் பிரிவு அதிகாரி என்.வி. சுப்பாராவ் தெரிவித்தார்.

"உதாரணத்திற்கு ஒரு குடும்பத்தில் ஐவர் இருந்தால் அவர்கள் தினமும் ஒரு முட்டையை வாங்கினால், மாத இறுதியில் நீங்கள் கூடுதலாக 15 ரிங்கிட் வரையில் பணம் செலவிட நேரிடும். மேலும் உதவித் தொகையும் குறைக்கப்பட்டுள்ளதால் காலப் போக்கில் முட்டை சம்பந்தப்பட்ட அனைத்து உணவுகளும் விலையேற்றம் அடைவதற்கு சாத்தியம் உள்ளது. அப்போது நாம் உணவகத்தையும் அதிகமாக சாட முடியாது," என்று அவர் குறிப்பிட்டார்.

அதிலும், ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் முட்டை விலையைக் காரணம் காட்டி சில உணவகங்களில் முட்டை தொடர்புடைய உணவுகளின் விலையை உயர்த்துவதற்கான சாத்தியம் உள்ளதையும் சுப்பாராவ் கோடிகாட்டினார்.

Mulai hari ini, subsidi telur dikurangkan dari 10 sen kepada 5 sen dan akan dihapuskan sepenuhnya pada Ogos. Keputusan ini mencetuskan kebimbangan kerana ia dijangka memberi kesan kepada golongan berpendapatan rendah yang bergantung kepada telur sebagai makanan asas.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *