சபா சட்டமன்றத் தேர்தலிலிருந்து அர்மிஸான் விலகல்!

- Muthu Kumar
- 29 Apr, 2025
பாப்பார், ஏப். 29-
எதிர்வரும் சபா மாநில சட்டமன்றத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று. உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர் அர்மிஸான் முஹமட் அலி தெரிவித்துள்ளார்.அதற்கு பதிலாக தமது பாப்பார் நாடாளுமன்றத் தொகுதி மீதான தமது பணியில் தாம் கவனம் செலுத்தப் போவதாக அவர் கூறியுள்ளார்.
ஒரு மத்திய அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எனும் முறையில், தமக்கான நேரம் சரியாக இருப்பதாகவும் மாநில சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டியதில்லை என்றும் அர்மிஸான் கூறியுள்ளார்.
“ஒரு நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக சுமார் இரண்டு ஆண்டுகளை மட்டுமே நான் நிறைவு செய்திருக்கின்றேன். ஆதலால், பாப்பார் நாடாளுமன்றத் தொகுதி மக்களின் விருப்பங்களை நிறைவு செய்ய நான் விரும்புகிறேன்" என்று சபாவின் பாப்பாரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது அர்மிஸான் தெரிவித்தார்.
“ஒரு மத்திய அமைச்சர் எனும் முறையில் இதர மாநிலங்களையும் நான் கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது" என்று காபுங்ஙான் ரக்யாட் சபா கூட்டணியின் துணைத் தலைமைச் செயலாளருமான அர்மிஸான் தெரிவித்தார்.
Menteri Arminsan Mohd Ali menyatakan beliau tidak akan bertanding dalam pilihan raya negeri Sabah akan datang. Beliau ingin fokus kepada tugas sebagai Ahli Parlimen Papar dan memenuhi kehendak pengundi. Sebagai Menteri Persekutuan, beliau turut memikul tanggungjawab nasional.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *