டிரம்பின் கணிக்க முடியாத நடவடிக்கைகள் - நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்-சுல்கிஃப்லி!

- Muthu Kumar
- 26 Apr, 2025
கோத்தா பாரு, ஏப்ரல் 26:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகளைத் தொடர்ந்து, குறிப்பாக மருத்துவ சாதனங்கள் மற்றும் மருந்துப் பொருட்களைப் பாதிக்கும் இரண்டு முக்கிய பிரச்சினைகளை சுகாதார அமைச்சு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மத் கூறினார்.
மருந்துகளுக்கு இந்த வரிகளிலிருந்து விலக்கு அளிக்கும் நோக்கத்தை டிரம்ப் முன்னர் குறிப்பிட்டிருந்தாலும், அண்மைய முன்னேற்றங்கள் வேறுவிதமாக இருப்பதாக அவர் கூறினார்.அறிவிக்கப்பட்ட சில கட்டணங்கள் தெளிவாக இல்லை என்றும், மேலும் டிரம்பின் கணிக்க முடியாத நடவடிக்கைகள் தொடர்பாக நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்
ஏப்ரல் 2 ஆம் தேதி, டிரம்ப் பல நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தொடர்ச்சியான பரஸ்பர வரிகளை அறிவித்தார், இதில் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 24 விழுக்காடும் அடங்கும், ஆனால் இது இப்போது 90 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Menteri Kesihatan, Datuk Seri Dr. Zulkifli Ahmad, berkata kementerian memantau dua isu utama akibat tarif dikenakan oleh Presiden AS, Donald Trump, terutama terhadap alat perubatan dan ubat-ubatan. Walaupun pengecualian disebut, perkembangan terbaru menuntut kewaspadaan terhadap tindakan Trump yang tidak menentu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *