PKR தேர்தலில் போட்டியிடுவேனா? கொஞ்சம் அமைதியாக இருங்கள்! - Saifuddin Nasution!

top-news

மே 4,

பி.கே.ஆர் கட்சியின் தேசிய தேர்தலில் தாம் போட்டியிடுவது குறித்தானச் செய்திகளில் எல்லோரும் ஆர்வமாக இருப்பதைத் தாம் உணர்ந்துள்ளதாக உள்துறை அமைச்சரும் பி.கே.ஆரின் மேனாள் பொதுச் செயலாளருமான Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்துள்ளார். இது கட்சிப் பொறுப்புக்கானத் தேர்தல் என்றும் எல்லோரும் கொஞ்சம் அமைதியாகவும் பொறுமையாகவும் இருங்கள் என்றும் Datuk Seri Saifuddin Nasution Ismail வலியுறுத்தினார். பி.கே.ஆரின் நடப்புத் துணைத் தலைவரான Rafizi Ramli உடன் 4 மணிநேரம் என்ன பேசினேன் என்பதை அறிய அனைவரும் ஆவலாக இருப்பதை விடுத்து அரசாங்கம் மக்களுக்காக முன்னெடுத்துள்ள திட்டங்களில் ஆர்வத்தைக் காட்டும்படி Datuk Seri Saifuddin Nasution Ismail கேட்டுக்கொண்டார். 

அரசியல்வாதியாக வெற்றியையும் தோல்வியைச் சந்தித்த நான் எந்த தருணத்திலும் பின்வாங்கியதில்லை. எதுவானாலும் தொடர்ந்து செயல்படுவதை உறுதியாகக் கொண்டுள்ளேன். பி.கே.ஆர் கட்சியில் போட்டி என்பது எல்லா கட்சிகளில் நடத்தப்படும் தேர்தலைப் போன்ற மிக சாதாரணமானது தான் என Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார். இன்னும் 4 நாள்களில் இது குறித்து அறிவிக்கிறேன். அதுவரையில் பொறுமையாக இருங்கள் என Datuk Seri Saifuddin Nasution Ismail வலியுறுத்தினார்.

Datuk Seri Saifuddin Nasution Ismail meminta semua pihak bersabar berhubung spekulasi pencalonannya dalam pemilihan PKR. Beliau menegaskan akan terus berkhidmat dalam apa jua keadaan dan akan membuat pengumuman rasmi dalam masa empat hari.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *