4 வழிப்பறிகளில் தொடர்புடைய ஆடவர் கைது!

- Sangeetha K Loganathan
- 25 Apr, 2025
ஏப்ரல் 25,
வழிப்பறியில் ஈடுபட்ட ஆடவரைப் பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தலத்தில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட வழிப்பறிக் கொள்ளையரைப் பொதுமக்களிடமிருந்து மீட்டு கைது செய்துள்ளதாக மலாக்கா மாநிலக் காவல் துறைத் தலைவர் Datuk Dzulkhairi Mukhtar தெரிவித்தார். கைது செய்யப்பட்ட வழிப்பறிக் கொள்ளையர் முன்னமே 4 வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஆடவர் 31 வயது உள்ளூர் ஆடவர் என்றும் கடந்த ஜனவரி முதல் இம்மாதம் வரையில் மலாக்காவில் வெவ்வேறு பகுதிகளில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டிருந்ததாகவும் Datuk Dzulkhairi Mukhtar தெரிவித்தார். பரிசோதனையில் கைது செய்யப்பட்ட ஆடவர் nimetazepam வகை போதைப்பொருளைப் பயன்படுத்தியிருப்பது தெரிய வந்துள்ளதாக Datuk Dzulkhairi Mukhtar தெரிவித்தார். இதுவரையில் RM10,000 ரிங்கிட் மதிப்பிலான வழிப்பறிகளை அவர் நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seorang lelaki tempatan berusia 31 tahun yang terbabit dalam empat kes samun ditahan selepas dipukul orang awam dalam satu kejadian yang tular di media sosial. Suspek positif dadah jenis nimetazepam dan melakukan samun bernilai RM10,000 sejak Januari.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *