மருந்துகளில் விலை பட்டியல் இருப்பது அவசியம்! நாளை முதல் அமல்படுத்தப்படும்!

- Sangeetha K Loganathan
- 30 Apr, 2025
ஏப்ரல் 30,
தனியார் அல்லது அரசு மருந்தகங்களில் உள்ள மருந்துகளின் விலையைச் சம்மந்தப்பட்ட மருந்ததகங்கள் வெளிப்படையாக வைத்திருக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad தெரிவித்தார். FARMASI’இல் விற்கப்படும் அனைத்து வகையான மருந்துகளின் விலைகளும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும் சம்மந்தப்பட்ட மருந்தகத்தின் விலை கட்டுப்பாடுகளை உள்நாட்டு வாழ்க்கை செலவீன அமைச்சு சோதனையிடும் என KPDN அமைச்சர் Datuk Armizan Mohd Ali தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வருவதால் நாளை முதல் அனைத்து மருந்தகங்களிலும் விற்பனை செய்யப்படும் மருந்துகளுக்கும் சுகாதாரப் பொருள்களுக்கும் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும், மருந்தகத்தின் கவுண்டர்களிலும் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தை முழுமையாக அனைத்து மருந்துகங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் சுகாதார அமைச்சும் KPDN அமைச்சும் இணைந்து சிறப்புக் குழுழை அமைத்து சோதனையில் ஈடுபடவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mulai esok semua farmasi awam dan swasta wajib memaparkan senarai harga ubat dan produk kesihatan secara jelas. Kementerian Kesihatan dan KPDN akan menjalankan pemeriksaan bagi memastikan pematuhan terhadap arahan baharu ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *