பாலியல் தொழிலில் ஈடுப்பட்ட பெண்கள் கைது! 10 சிறுமிகள் மீட்பு!

top-news

மே 3,

பாலியல் தொழிலில் ஈடுப்பட்ட வெளிநாட்டுப் பெண்களையும் அவர்களுடன் இருந்த 7 உள்ளூர் ஆண்களையும் தேசிய குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளது. ஜொகூர் பாருவில் உள்ள வணிகக் கடைகளில் நேற்று மேற்கொண்ட சோதனையில் வயது குறைந்த 10 சிறுமிகளும் மீட்கப்பட்டுள்ளதாகத் தேசிய குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. இச்சோதனையில் மூலமாக RM 128,000 ரிங்கிட் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. 

சம்மந்தப்பட்ட வெளிநாட்டுப் பெண்களைக் கொண்டு பாலியல் சேவைகளை நடத்தியதாக 7 உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 65 பெண்களையும் அவர்களுடன் 15 வயதுக்கும் குறைவான 10 சிறுமிகள் மீட்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. மீட்கப்பட்ட 10 சிறுமிகளும் அடிமைகளாக இருந்ததாகவும் பாலியல் சீண்டலுக்குள்ளானதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Satu serbuan oleh Jabatan Imigresen di Johor Bahru berjaya menahan 65 wanita warga asing dan 7 lelaki tempatan terlibat dalam pelacuran, serta menyelamatkan 10 kanak-kanak perempuan bawah umur yang dipercayai menjadi mangsa eksploitasi seksual dan perhambaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *