கேளிக்கை மையத்தில் 119 பேர் கைது!

top-news

மே 3,

கேளிக்கை மையத்தில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுப்பட்டதற்காக 105 வெளிநாட்டினர்களுடன் 14 உள்ளூர்வாசிகளையும் கைது செய்துள்ளதாகத் தேசிய குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. இரவு 11.30 மணிக்குத் தலைநகரின் Jalan Imbi சாலையில் அமைந்துள்ள கேளிக்கை மையத்தில் சோதனையை மேற்கொண்டதில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 102 வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் 3 வெளிநாட்டு ஆண்களும் 14 உள்ளூர் ஆடவர்கள் என மொத்தம் 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய குடிநுழைவுத் துறை உதவி இயக்குநர் Tuan Jafri bin Embok Taha தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட பெண்கள் 21 முதல் 35 வயதுக்குற்பட்ட Thailand, Vietnam, Indonesia, Laos, Myanmar ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சுற்றுலா விசாவில் மலேசியாவிற்குள் நுழைந்து கேளிக்கை மையத்தில் பாலியல் சேவைகள் வழங்குவதாகவும் இதன் மூலமாக மாதம் RM 7,000 முதல் RM 25,000 வரையில் வருமானம் பெற்று வருவதாகவு முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தேசிய குடிநுழைவுத் துறை உதவி இயக்குநர் Tuan Jafri bin Embok Taha தெரிவித்தார்.. சம்மந்தப்படட் கேளிக்கை மையத்தின் உரிமையாளரையும் மேலாளரையும் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jabatan Imigresen menahan 119 individu termasuk 105 warga asing dalam serbuan di pusat hiburan di Jalan Imbi, Kuala Lumpur. Seramai 102 wanita warga asing dipercayai terlibat dalam pelacuran dengan pendapatan sehingga RM25,000 sebulan melalui visa pelancong.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *