பினாங்கில் அடுத்தடுத்து அந்நியர்கள் அத்துமீறல் உரிமமின்றி நடத்தும் உணவுக் கடைகள்!

top-news
FREE WEBSITE AD

(ஆர்.ரமணி)

பினாங்கு, மே 9-

பினாங்கு மாநிலத்தில் உரிமம் பெறாது சட்டவிரோதமாக வழி நடத்தப்பட்டு வரும் அந்நியர்களின் வர்த்தகத் தொழில்களை முற்றாக முடக்கும் பொருட்டு, மாநில மாநகர் மன்றம் அடுத்தடுத்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையிலும், அத்தரப்பினரின் அத்துமீறல்கள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து வரும் முரணான செயல்பாடுகள், சினமூட்டும் வகையில் நீண்டு வருவது தொடர்பில், துடைத்தொழிப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அத்தகைய ரீதியில் மாநிலத்தின் தென்மேற்கு மாவட்டத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட ஓர் அதிரடி நடவடிக்கையில் இரட்டை தளங்களிலான பெரியதோர் உணவகம், அந்நிய நபர்களால் வழி நடத்தப்பட்டு வரும் விவகாரம் அம்பலமானதைத் தொடர்ந்து அங்கு விரைந்த மாநகர் மன்றத்தின் வணிக உரிமப் பிரிவினரும் கட்டாய அமலாக்கத் துறை அதிகாரிகளும் அங்கு சோதனையிட்ட போது, அவர்களது வணிகம் உரிமம் இல்லாத நிலையில், முரணாக நடத்தப்பட்ட உண்மை நிலவரம் நிரூபணமானது.இதனைத் தொடர்ந்து, அவ்விடத்திற்கு வரவழைக்கப் பட்ட, காவல் துறையினரர், குடிநீர் வாரியப் பிரிவினர் மற்றும் மின்சாரத் துறை ஊழியர்கள் ஆகியோரின் கூட்டுத் துணையுடன், அமலாக்கப் பிரிவு ஊழியர்கள், சம்பந்தப்பட்ட உணவகத்தை தகர்த்து, தரை மட்டமாக்கியதோடு, அங்கு காணப்பட்ட, பற்பல தளவாடப் பொருள்களையும் வணிக உபகரணங்களையும் பறிமுதல் செய்து, அவற்றை லோரியில் ஏற்றி தங்களது கிடங்கிற்கு எடுத்துச் சென்றனர்.

உரிமம் இல்லாத வணிக உபகரணங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை மாநகர் மன்றத்தின் 1979ஆம் ஆண்டுக்கான சட்டவிதியில் அடங்கியிருப்பதாலும், அனுமதியின்றி கட்டமைப்புகளை ஏற்படுத்தியிருப்பதை தகர்த்தெறியும் 1974ஆம் ஆண்டுக்கான 46ஆம் விதிகளில் உட்படுத்தப்பட்டிருப்பதாலும், அக்கட்டடத்தை நிலச் சமனி இயந்திரத்தின் வாயிலாக தரைமட்டமாக்கும் பணி செயல்படுத்தப்பட்டது.

Penang, Di daerah selatan negeri ini, satu operasi mengejut dijalankan ke atas sebuah restoran besar yang dikendalikan oleh warga asing tanpa lesen. Aktiviti haram ini dibongkar dan peralatan perniagaan yang tidak sah dirampas serta premis tersebut dihancurkan mengikut undang-undang.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *