சபா சட்டமன்றத் தேர்தலில் புங்மொக்தார் “பிரச்சார நாயகனா?” அது மிகவும் ஆபத்தானது!

- Muthu Kumar
- 05 May, 2025
கோலாலம்பூர், மே 5-
எதிர்வரும் சபா மாநில சட்டமன்றத் தேர்தலில், தேசிய முன்னணியின் "பிரச்சார நாயகனாக" மாநில அம்னோ தலைவர் புங் மொக்தாரின் பெயரைக் குறிப்பிடுவது மிகவும் ஆபத்தானது என்று, அரசியல் ஆய்வாளர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டில், மாநில முதமைச்சர் ஹஜிஜி நோரை வீழ்த்தும் முயற்சியில் ஏற்பட்ட தோல்வியுடன் புங் மொக்தார் தொடர்புப்படுத்தப்பட்டிருப்பதை, சபா மலேசிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பில்செர் பாலா சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆதலால், தேசிய முன்னணியின் "பிரச்சார நாயகனாக" புங் மொக்தாரின் பெயரைக் குறிப்பிடுவது, அக்கூட்டணியின் வெற்றி வாய்ப்புகளை பாதிக்கச் செய்துவிடக் கூடும் என்பதுடன், மாநிலத்தில் அம்னோவின் வீழ்ச்சியையும் துரிதப்படுத்தி விடக் கூடும்
என்று பில்செர் குறிப்பிட்டார்.புங் மொக்தாரின் தலைமைத்துவ பாணி "சில நேரங்களில் முரட்டுத்தனமானதாகக் கருதப்படுகிறது" என்ற கருத்தை பல கட்சிகள் பகிர்ந்து கொண்டும் வருவதாக அவர் தெரிவித்தார்.
சபா அம்னோவின் பரிந்துரை கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தாலும், “ஓர் அரசியல் வியூகக் கண்ணோட்டத்தில், தேசிய முன்னணியின் 'முகமாக' புங் மொக்தாரைத் தேர்ந்தெடுப்பது ஆபத்தான ஒன்று எஃப்எம்டியிடம் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணியின் எதிர்பார்ப்பை, புங் மொக்தார் மீது தற்போது நடந்து வரும் லஞ்ச ஊழல் விசாரணையும் அவரின் தனிப்பட்ட விவகாரங்களும் பாதித்துவிடாமல் இருப்பதை
உறுதிப்படுத்த, தனது பிரச்சார அணுகுமுறையை தேசிய முன்னணி மிகக் கவனமாக திட்டமிட வேண்டும் என்று. அதேபல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஷாருடின் அவாங் அஹ்மாட் தெரிவித்தார்.
மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய முன்னணியின் "பிரச்சார நாயகனாக", மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சருமான புங் மொக்தார் நியமிக்கப்பட வேண்டும் என்று, சபா அம்னோ கடந்த வாரத்தில் முன்மொழிந்திருந்தது. "அப்பதவிக்கு "புங் மொக்தார் மிகவும் தகுதியானவர்" என்றும் மாநில தேசிய முன்னணி தகவல் பிரிவுத் தலைவர் சுஹைமி நசிர் கூறியிருந்தார்.
"மாநில தேசிய முன்னணி தலைவரே எங்களின் "பிரச்சார நாயகனாக ” இருந்து வருவது சபா அம்னோவின் பாரம்பரியம்
என்று கூறியிருந்தார். எனினும், மாநிலத்
தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கே முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதால், யார் தனது "பிரச்சார நாயகன்" என்பதை முடிவு செய்ய இது நேரமல்ல என்று, தேழு தலைவர் அஹ்மட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்திருந்தார்.
தனது “பிரச்சார நாயகனை" தேமு இப்போது அறிவிக்குமேயானால், தேர்தலை மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பிலான ஒத்துழைப்பு மீதான இதர கட்சிகளுடனான விவாதங்கள் நின்று விடும் என்று, பல அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.சபா மாநில சட்டமன்றத் தேர்தல் இவ்வாண்டு டிசம்பருக்குள் அவசியம் நடத்தப்பட்டுவிட வேண்டும்.
Penganalisis politik memberi amaran bahawa pencalonan Bung Moktar sebagai “wira kempen” BN di Sabah berisiko, kerana kaitannya dengan kegagalan menumbangkan Ketua Menteri Hajiji dan isu rasuah yang masih berlangsung, boleh menjejaskan peluang BN dalam pilihan raya negeri.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *