Siti Kasim ஒரு முட்டாள்! நீதிமன்றத்தில் முன்னாள் மெந்திரி பெசார் வாக்குவாதம்!

top-news

ஏப்ரல் 29,

பொதுநல வழக்கறிஞரான Siti Kasim-ஐ பகாங் மாநில முன்னாள் மெந்திரி பெசார் Tan Sri Adnan Yaakob மிரட்டும்படியானக் காணொலி சமூகவலைத்தலத்தில் பரவியது. பூர்வக்குடி மக்களின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் வழங்கிய நிலங்களை அரசியல்வாதிகள் தங்கள் விருப்பத்திற்கு விற்பனை செய்து வந்ததாகச் சமூக ஆர்வலரும் பொருநல வழக்கறிஞருமான Siti Kasim வழக்கு தொடுத்த நிலையில் வழக்கின் விசாரணைக்காக வந்த பகாங் மாநில முன்னாள் மெந்திரி பெசார் Tan Sri Adnan Yaakob நீதிமன்ற வளாகத்திலேயே  Siti Kasim ஒரு முட்டாள் என்றும், வழக்கு தொடுத்து பணம் பறிக்கும் கும்பல் என்றும் கடுமையாகச் சாடினார்.

Siti Kasim முகத்திற்கு அருகில் விரல்களை நீட்டிய Tan Sri Adnan Yaakob கடுமையான வார்த்தைகளால் தாக்கினாலும் Siti Kasim புன்னகைத்தபடியே  வறுமையில் இருக்கும் பூர்வக் குடியினர்களே பொய்யை மட்டுமே சொல்லும் அரசியல்வாதிகளை நம்பாதீர்கள் என்றும் விரலை நீட்டாமல் பேசும்படியும் Tan Sri Adnan Yaakob-ஐ வலியுறுத்தினார். இந்த வழக்கு தொடர்பாக Tan Sri Adnan Yaakob நீதிமன்றத்தின் விசாரணைக்கு வரும்போதெல்லாம் தாம் இதையே செய்ய போவதாகவும் கடுப்பாகும் ஊழல்வாதிகள் கடுப்பாகட்டும் என்றும் Tan Sri Adnan Yaakob போன்ற கீழ்த்தரமானவர்களுக்கு எதிராக என்னுடைய குரல் எப்போதும் இருக்கும் என Siti Kasim தெரிவித்தார். 

Bekas Menteri Besar Pahang, Adnan Yaakob, dan peguam Siti Kasim bertikam lidah di Kompleks Mahkamah Kuala Lumpur gara-gara isu hak Orang Asli. Adnan didakwa menghambur kata kesat, manakala Siti kekal tenang dan fokus pada perjuangannya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *