கட்சிப் பதவிதான் முக்கியம்? அமைச்சர் பணி முக்கியமில்லையா? - புவாட் கேள்வி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 7-

அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து விவாதிப்பதற்காக நேற்றுமுன்தினம் திங்கள்கிழமை கூட்டப்பட்ட சிறப்பு மக்களவைக் கூட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்து விட்டு, அதற்கு முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை நடந்த கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிகேஆர் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லியை அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஒருவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தமது அமைச்சர் பணியிலிருந்து தாம் விடுமுறை எடுத்திருப்பதற்கான காரணம் குறித்து விளக்கமளிக்குமாறு ரஃபிஸியை, ரெங்கிட் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ புவாட் ஸர்காஷி வலியுறுத்தி இருக்கின்றார்.

“அதிகமான ஆருடங்கள் சுழன்று கொண்டிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை எதிர்மறையானவையாக இருக்கின்றன. அவரின் விடுமுறை பிகேஆர் கட்சித் தேர்தலுடன் தொடர்புடையானவை என்பது உண்மையென்றால், அது அவருடைய டய (ரஃபிஸி) பொறுப்பற்ற செயலாகவே இருக்கும்.

"தமது கட்சிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க விரும்பினால், நீண்ட நாட்களுக்கு விடுமுறையில் செல்வது மற்றும் நீண்ட நாட்களுக்கு "தலைவர்" இல்லாத நிலைக்கு தமது அமைச்சை கைவிட்டிருப்பதற்கு பதிலாக, பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து அவர் விலகிவிட வேண்டும்.

"அமைச்சு மிக முக்கியமானது முதலில் அமைச்சு,, அதன் பின்னர்தான் கட்சி" என்று. முகநூலில் பதிவிட்டுள்ள ஒரு பதிவில் புவாட் குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரத் துறை அமைச்சரான ரஃபிஸி, அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து விவாதிப்பதற்காக நேற்றுமுன்தினம் திங்கள்கிழமை சிறப்பு மக்களவைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் அவர் கலந்து கொள்ளவில்லை.

ஆனால், அதற்கு முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை நடந்த பிகேஆர் கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்றக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டிருந்தார். பிகேஆர் கட்சியின் தொகுதித் தேர்தல்களில் தமது ஆதரவாளர்களில் பலர் தோல்வி அடைந்துள்ள சமயத்தில், ரஃபிஸி விடுமுறையில் சென்றிருக்கின்றார்.ஓர் ஊழியர் விடுமுறை கோருவது வழக்கமான ஒன்று என்று. இம்மாதம் 2ஆம் தேதி கூறியிருந்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ரஃபிஸி ராஜினாமா செய்திருப்பதாகக் கூறப்படுவதையும் நிராகரித்திருந்தார்.

“சில நாட்களுக்கு மட்டுமே விடுமுறையில் செல்வது விவகாரமே அல்ல. நானும் சில நாட்களுக்கு விடுமுறையில் செல்ல விரும்புகிறேன் என்றுஅன்வார் தெரிவித்திருந்தார். கட்சித் தேர்தல் பிரச்சாரங்களில் அதிருப்தி அடைந்த காரணத்தினால்தான், பிகேஆர் துணைத் தலைவருமான ரஃபிஸி. இம்மாதம் 31ஆம் தேதி வரையில் விடுமுறையில் சென்றிருப்பதாகக் கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டு குறித்து கருத்து கேட்டிருந்தபோது அன்வார் இவ்வாறு பதிலளித்திருந்தார்.

இந்நிலையில், இம்மாத பிற்பகுதியில் நடைபெற விருக்கும் கட்சித் தேர்தலில் தமது துணைத் தலைவர் பதவியை தற்காத்துக் கொள்ள ரஃபிஸி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஃபிஸியை எதிர்த்து உள்துறை அமைச்சரான டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் போட்டியிடக் கூடும் என்ற ஊகங்களும் நிலவி வருகின்றன.

Rafizi Ramli dikritik kerana tidak hadir sidang khas Parlimen mengenai cukai AS tetapi hadir mesyuarat parti PKR. MP Puad Zarkashi mendesak penjelasan cuti Rafizi. PM Anwar nafikan Rafizi letak jawatan, sahkan beliau hanya ambil cuti pendek.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *