RM 360 மில்லியன் ஊழல்! DATUK SERI உட்பட நால்வர் கைது!

top-news

ஏப்ரல் 30,

நெடுஞ்சாலை குத்தகையில் RM 360 மில்லியன் ஊழல் நிகழ்ந்திருப்பதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளரான டத்தோ ஸ்ரீ ஒருவரையும் பெண் ஒருவர் உட்பட மேலும் உள்ளூர் ஆடவர்கள் இருவரையும் கைது செய்துள்ளது. நேற்று மாலை 4 மணி முதல் 6 மணி வரையில் சம்மந்தப்பட்ட நால்வரிடமும் புத்ராஜெயா ஊழல் தடுப்பு அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் விசாரணைக்குப் பின்னர் அவர்கள் நால்வரையும் கைது செய்துள்ளதாக SPRM புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் Datuk Zainul Darus தெரிவித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலை மறு சீரமைப்பில் RM1.30 பில்லியன் செலவிடப்பட்டதில் RM360 மில்லியன் நிதிக்கானக் கணக்கறிக்கையில் போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக SPRM புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் Datuk Zainul Darus தெரிவித்தார்.

SPRM menahan empat individu termasuk seorang Datuk Seri kerana disyaki terlibat dalam penipuan RM360 juta berkaitan projek naik taraf lebuh raya Klang Valley. Mereka dipercayai mengemukakan dokumen palsu dalam penyata kewangan antara 2016 hingga 2017.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *