மருத்துவமனையில் நாடாளுமன்ற உறுப்பினர்! – ஜொகூர் அமானா விளக்கம்!

top-news

ஏப்ரல் 30,

ஜொகூர் Pulai சட்டமன்ற உறுப்பினரான Suhaizan Kayat நேற்றிரவு சுயநினைவற்ற நிலையில் Iskandar Puteri மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரவு 11 மணியளவில் இது தொடர்பானச் செய்திகள் முன்னதாக வெளியான நிலையில் Pulai சட்டமன்ற உறுப்பினரான Suhaizan Kayat உடல்நிலை குறித்து ஜொகூர் மாநில அமானா கட்சித் தலைவர் AMINOLHUDA HASSAN இன்று விளக்கமளித்தார்.

51 வயதான Pulai சட்டமன்ற உறுப்பினர் Suhaizan Kayat நேற்றிரவு 11 மணிக்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் இன்று காலை சுயநினைவுடன் இருப்பதாகவும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் விளக்கமளித்தார். தற்போது அவரின் உடல் சீராக இருப்பதால் சில நாள்கள் ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் மக்கள் பணியைத் தொடர்வார் என ஜொகூர் மாநிலப் பக்காத்தான் கூட்டணி தலைவருமான AMINOLHUDA HASSAN தெரிவித்தார்.

Ahli Parlimen Pulai, Suhaizan Kayat, dimasukkan ke Hospital Iskandar Puteri malam tadi dalam keadaan tidak sedarkan diri. Beliau kini stabil dan sedar serta dijangka kembali bertugas selepas beberapa hari berehat menurut AMANAH Johor.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *