தனியார் விளையாட்டு மைதானத்திற்கு நிதி கொடுக்க முடியாது! – HANNAH YEOH அதிரடி!

- Sangeetha K Loganathan
- 28 Apr, 2025
ஏப்ரல் 28,
தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விளையாட்டுப் பயிற்சி மையங்களுக்கு இனி அரசு நிதி வழங்கப்படாது என இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் HANNAH YEOH தெரிவித்தார். மேம்பாட்டுத் திட்டங்களுக்காகவும் பயிற்சிக்காகவும் கோரப்படும் நிதிகள் தனியாருக்குச் சொந்தமான விளையாட்டு மையங்களுக்குச் செலவழிப்பதை விட, அரசு உடற்பயிற்சி மையங்களை மேம்படுத்த செலவிடலாம் என HANNAH YEOH தெரிவித்தார்.
தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்துள்ள பயிற்சி மையங்களில் பயிற்சியை மேற்கொள்ளாமல், அரசு மைதானங்களைப் பயன்படுத்தும்படி பயிற்சியாளர்களுக்கு HANNAH YEOH வலியுறுத்தினார். அரசு நிதையையும் பெற்று, பயிற்சிக்கான வாடகையையும் அரசிடமிருந்து பெறும் முக்கிய தனியார் பயிற்சி மையங்களுக்கு இனி எந்தவோர் அரசு நிதியும் வழங்கப்படாது என்றும், இனியும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான விளையாட்டு மையங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இயங்காது என்றும் HANNAH YEOH தெரிவித்தார்.
Menteri Belia dan Sukan Hannah Yeoh menegaskan kerajaan tidak akan lagi menyalurkan dana kepada pusat latihan sukan milik persendirian. Fokus diberikan kepada menaik taraf kemudahan kerajaan serta menggalakkan penggunaan padang dan pusat sukan awam.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *