போதைப்பொருள் வழக்கில் சம்மந்தப்பட்ட ஆடவரின் 1 மில்லியன் மதிப்பிலானச் சொத்துகள் பறிமுதல்!

top-news

மே 1,

போதப்பொருள் கடத்தல் வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் 35 வயது அழகு சாதனப் பொருள்களை விற்பனைச் செய்யும் ஆடவர் கைது செய்யப்பட்டதுடன் அவரி 1 மில்லியனுக்கும் அதிகமானச் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் திரங்கானு மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Mohd. Khairi Khairuddin தெரிவித்தார். போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதால கிடைத்த வருமானத்தைக் கணக்குக்காட்டுவதற்காக அழகு சாதனப் பொருள்களை விற்பனை செய்வதாக அரசாங்கத்தையும் ஏமாற்றியிருப்பதும் முதற்கட்ட விசாரணைய்ல் தெரிய வந்துள்ளது. 

நேற்றொரவு சம்மந்தப்பட்ட ஆடவருக்குச் சொந்தமான அழகு சாதனக் கடையிலிருந்து 1.02 கிலோ எடையிலான syabu வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் நேற்றிரவு 8.40 மணிக்குக் கோலா திரங்கானுவில் Kampung Paya Keladiயில் உள்ள அவரது வீட்டில் 35 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திரங்கானு மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Mohd. Khairi Khairuddin தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்டுள்ல போதைப்பொருளைச் சுமார் 6,000 க்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தலாம் என அறியப்படுகிறது.

Seorang lelaki berusia 35 tahun ditahan di Kampung Paya Keladi, Terengganu kerana disyaki terlibat dalam pengedaran dadah. Polis merampas syabu seberat 1.02kg dan aset bernilai lebih RM1 juta yang dipercayai hasil kegiatan dadah disamarkan melalui perniagaan kosmetik.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *