தீயில் கருகிய 3 வீடுகள்! தலைநகரில் சோகம்!

- Sangeetha K Loganathan
- 01 May, 2025
மே 1,
தலைநகரின் Raja Muda Musa குடியிருப்புப் பகுதியில் உள்ள 3 வீடுகள் தீயில் கருகியது. இன்று காலை 9.39 மணிக்குத் தீ விபத்து குறித்தான அவசர அழைப்பைப் பெற்றதும் 24 தீயணைப்பு மீட்பு அதிகாரிகளுடன் விரைந்ததாகக் கோலாலம்பூர் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Mohamad Riduan Akhyar தெரிவித்தார்.
காலை 9.50 மணிக்குச் சம்பவ இடத்திற்கு விரைந்ததும் வீட்டினுள் சிக்கியிருந்தவர்களை மீட்டு தீயைக் கட்டுப்படுத்தியதாகவும் 10.13 மணிக்குத் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் Mohamad Riduan Akhyar தெரிவித்தார். இத்தீ விபத்தில் 2 வீடுகள் முற்றிலும் தீயில் கருகியதாகவும் மூன்றாவது வீடு 40% தீயி கருகியதாகவும், எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என Mohamad Riduan Akhyar உறுதிப்படுத்தினார். தீ ஏற்பட்டதற்கானக் காரணத்தைத் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tiga buah rumah di kawasan perumahan Raja Muda Musa, Kuala Lumpur musnah dalam kebakaran pagi tadi. Dua rumah musnah sepenuhnya manakala satu lagi rosak 40%. Tiada kematian dilaporkan dan punca kebakaran masih disiasat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *