தாக்குதல்களை நிறுத்துங்கள் இப்போது நாம் ஒரே கூட்டணியில் உள்ளோம்!

- Muthu Kumar
- 09 May, 2025
கோலாலம்பூர், மே 9-
ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்கி இருப்பதில் ஓர் அங்கமாக இருக்கின்ற காரணத்தினால், மசீச தமது கட்சி மீது தாக்குதல்களைத் தொடுக்கக் கூடாது என்று. ஜொகூர் மாநில ஜசெக தலைவர் ஒருவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
“நடப்பு அரசாங்கத்தை பலவீனப்படுத்த மசீச புறப்பட்டு விட்டால், தனது விருப்பப்படி முத்திரை குத்தி ஜசெக மீது அது சுதந்திரமாக தாக்குதல்களைத் தொடுக்கலாம்” என்று, கூறியுள்ள ஜொகூர் மாநில ஜசெக உதவித் தலைவர் ஷேக் உமார் அலி, ஜசெக தனது கொள்கைகளில் உறுதியாக இருக்கிறது என்றார்.
மாட்சிமை தங்கிய மாமன்னரின் உத்தரவுக்கிணங்க, நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக, தனது பரம வைரியான அம்னோ உட்பட ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் ஜசெக கூட்டுச் சேர்ந்திருப்பதாக, பாலோ சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான ஷேக் உமார் தெரிவித்தார்.
“ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடனான எங்களின் ஒத்துழைப்பு, மக்கள் மற்றும் நாட்டின் நலன்களுக்கானதாகும்" என்று அவர் தெரிவித்தார். ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றிருக்கும் தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளில் மசீசவும் ஒன்றாகும். கொள்கை விவகாரங்களில் ஜசெக அவ்வப்போது பின்பற்றி வரும் முரண்பாடான போக்கினால்தான், தனது பரம வைரியுடன் மசீச கூட்டுச் சேராமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்று, மசீசவின் முன்னாள் உதவித் தலைவர் தி லியான் கெர் அண்மையில் கூறியிருந்தார்.
தங்களின் நலன்களுக்கு ஏற்ப ஜசெக அவ்வப்போது "வெவ்வேறு போக்குகளைப் பின்பற்றி வருகிறது என்றும் அவர் கூறியிருந்தார்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவின் 22 ஆண்டு கால ஆட்சியின்போது அவரை கடுமையாக விமர்சித்து வந்த வேளையில், கடந்த 2018ஆம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலின்போது அவருடன் கூட்டுச் சேருவதென்று ஜசெக முடிவு செய்ததும் அக்காரணங்களில் அடங்கும் என்று லியான் கெர் தெரிவித்திருந்தார்.அதேபோல், பக்காத்தான் ரக்யாட் கூட்டணியில் ஜசெகவும் பாஸ் கட்சியும் இடம் பெற்றிருந்தபோது, பாஸ் கட்சியை ஜசெக பாராட்டிக் கொண்டிருந்தது. ஆனால், அக்கூட்டணியிலிருந்து பிரிந்து சென்ற பின்னர் பாஸ் கட்சியை ஜசெக வசைபாடத் தொடங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தன்னை அவமதித்துப் பேசிய காரணங்களுக்காக அம்னோவை இதற்கு முன்னர் கடுமையாகச் சாடி வந்த ஜசெக தற்போது அதற்கு "வளைந்து கொடுத்து' வருகிறது என்று லியான் கெர் விமர்சித்திருந்தார்.
Pemimpin JSEK Johor, Sheikh Umar, menegaskan JSEK menyertai kerajaan perpaduan demi kestabilan negara, dan meminta MCA agar tidak menyerang parti itu. Beliau menolak dakwaan JSEK bersikap tidak konsisten, menyatakan kerjasama mereka demi rakyat dan negara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *