முகைதீன் பாஸ்போர்ட் தற்காலிக விடுவிப்பு!

- Shan Siva
- 25 Apr, 2025
கோலாலம்பூர், ஏப்ரல் 25: ஆஸ்திரேலியாவில் உள்ள தனது நோய்வாய்ப்பட்ட
மைத்துனியைப் பார்க்க தனது அனைத்துலக கடவுச் சீட்டை தற்காலிகமாக விடுவிப்பதற்கான
டான் ஸ்ரீ முகைதீன் யாசின் விண்ணப்பத்தை இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம்
அனுமதித்தது.
முன்னாள்
பிரதமரின் வழக்கறிஞர் கீ வெய் லோனின் கோரிக்கையைத் தொடர்ந்து நீதிபதி அசுரா அல்வி
அவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டார். மேலும் துணை அரசு வழக்கறிஞர் நோராலிஸ் மாட்
எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.
முகைதீனின் பாஸ்போர்ட் இன்று விண்ணப்பதாரரிடம்
ஒப்படைக்கப்படும் என்றுஜ், மேலும் மே 20 ஆம் தேதி நீதிமன்றத்தில் திருப்பி
அனுப்பப்பட வேண்டும் என்று அசுரா கூறினார்.
பிரதமராகவும் பெர்சத்து தலைவராகவும் இருந்த 77 வயதான முகைதீன், தனது அரசியல் கட்சியின் நலனுக்காக ஜனா விபாவா திட்டத்துடன் தொடர்புடைய RM232.5 மில்லியன் லஞ்சம் பெற தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து அவரது பாஸ்போர்ட் முடக்கம் கண்டது!
Mahkamah Sesyen Kuala Lumpur membenarkan permohonan Tan Sri Muhyiddin Yassin untuk mendapatkan pasportnya sementara bagi melawat adik iparnya yang sakit di Australia. Pasport perlu dipulangkan sebelum 20 Mei.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *