மலாய்க் கட்சிகளை ஒன்றுபடுத்துவதில் ஆட்சியாளர்கள் உதவ முடியும்- ஹம்ஸா!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 6

நாட்டிலுள்ள மலாய்க்காரர் கட்சிகளை ஒன்றிணைப்பதில் மலாய் ஆட்சியாளர்கள் முக்கிய பங்கை ஆற்ற முடியும். நாட்டில் மலாய்க்கார சமூகத்தின் ஆதிக்கத்தை வலுப்படுத்த இது உதவும் என்று தாம் நம்புவதாக. பெர்சத்து துணைத் தலைவர் ஹம்ஸா ஸைனுடின் கூறியுள்ளார்.

80 ஆண்டுகளுக்கு முன்பு மலாயன் யூனியன் உருவாவதற்கு எதிரான வெற்றிகரமான எதிர்ப்பை குறிப்பிட்ட அவர், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் முடியாட்சியின் திறனுக்கான சான்றாக அந்த வரலாற்றை சுட்டிக் காட்டினார்.

1946ஆம் ஆண்டில் மலாயன் யூனியனுக்கு எதிரான எதிர்ப்பை திரும்பிப் பாருங்கள். கிளந்தான், ஜொகூர், கெடா மற்றும் தீபகற்பம் முழுவதிலும் இருந்து மலாய்க்காரர்கள் எவ்வாறு ஒன்றிணைந்து இறுதியில் அம்னோவை நிறுவினர் என்பது அதுவாகும்.
ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்டதால்தான் அது நடந்தது" என்று, பெரிக்காத்தான் நேஷனலின் துணைத் தலைவருமான ஹம்ஸா தெரிவிவித்தார்.அந்த சமயத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மலாய்க்காரர்கள் ஒன்றிணையாமல் இருந்திருந்தால், அம்னோ உருவாகி இருக்காது என்று அவர் கூறினார்.

மலாய் ஆட்சியாளர்களின் முழு ஆதரவைப் பெறுவதற்காக அனைத்து மலாய்க் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது கடந்த வாரத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். மலாய்க்காரர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள
பிளவுகள் மலாய் சமூகத்தை பலவீனப்படுத்தி விடும் என்பதுடன், முடியாட்சியையும்
குறைமதிப்பிற்கு உட்படுத்தக் கூடும் என்று மகாதீர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

நடப்புச் சூழ்நிலை குறித்து மலாய் ஆட்சியாளர்களிடம்  பேச தாம் தயாராக இருப்பதாகவும் ஆனால், இதற்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்க இதர கட்சிகளும் முன்வரவேண்டும் என்றும் வலியுறுத்தினார். மலாய் ஆட்சியாளர் மாநாட்டின் உத்தரவின் பேரில் அனைத்து மலாய் கட்சிகளும் ஒன்று சேர முடிந்தால், குறிப்பாக விரைந்து அவ்வாறு செய்தால், அதிகமான எதிர்கால பிரச்சினைகளைத் தீர்த்துவிட முடியும் என்று நான் நம்புகிறேன்.

"அதன் பின்னர் மலேசியாவை மலாய்க்காரர்கள் மீண்டும் ஆட்சிப்புரிவார்கள்" என்று வாருட் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹம்ஸா கூறினார்.

கடந்த 15ஆவது பொதுத் தேர்தலில் நடந்ததுபோல், எதிர்வரும் பொதுத்தேர்தலில் கட்சிகளுடன் ஒத்துழைக்கக் கூடிய சாத்தியம் குறித்து கேட்டபோது, 2022ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஒற்றுமை அரசாங்கம் எப்படி அமைக்கப்பட்டது என்பதை அனைத்து தரப்பினரும் மீண்டும் சரிபார்க்க வேண்டும் என்று பதிலளித்தார்.

மாட்சிமை தங்கிய மாமன்னர் பரிந்துரை செய்வாரேயானால் பெரிக்காத்தான் நேஷனல்-அம்னோ கூட்டணி அரசாங்கம் உருவாகக் கூடிய சாத்தியம் இருப்பதாக ஹம்ஸா தெரிவித்தார்.கடந்த காலத்தில் ஜசெக மற்றும் பக்காத்தான் ஹராப்பானுடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவத்தை பெர்சத்து பெற்றிருப்பதாக, 2018 முதல் 2020 வரையில் பெர்சத்து மத்தியில் ஆட்சி புரிந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.

BERSATU Timbalan Presiden Hamzah Zainudin menyatakan Raja-raja Melayu mampu menyatukan parti-parti Melayu demi mengukuhkan dominasi Melayu. Beliau merujuk sejarah penubuhan UMNO dan menyokong saranan Tun Mahathir agar semua parti Melayu bersatu demi kestabilan negara.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *