ஆசியான் மாநாடு... இல்லிருப்புக் கற்றல் கற்பித்தலுக்கான பள்ளிகள் பெயர் அறிவிக்கப்படும்

- Shan Siva
- 08 May, 2025
புத்ராஜெயா, மே 8: 2025 ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது அமல்படுத்தப்படவிருக்கும்
PdPR எனப்படும் இல்லிருப்பு கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளவிருக்கும் பள்ளிகளின்
பட்டியலை கல்வி அமைச்சு விரைவில் அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக
மாணவர்கள் மற்றும் பெற்றோரின் பயணத்திற்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க
இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி
ஃபட்சில் தெரிவித்தார்.
இந்நடவடிக்கையில் இடம்பெறும் பள்ளிகளின் முழுப் பட்டியல்
விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சரவை கூட்டத்திற்கு பின்பு, புத்ராஜெயாவில்
நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.
ஆசியான் மாநாட்டிற்கான முக்கிய பாதைகளில் உள்ள பள்ளிகளை
கல்வி அமைச்சு அடையாளம் கண்டு, அந்தப் பள்ளிகளின் பட்டியல் அறிவிக்கப்படும் என்றும், சம்பந்தப்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இல்லிருப்பு
கற்றல் கற்பித்தலை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இதைத் தவிர்த்து, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய சுற்று வட்டாரப் பாதைகளுடன் மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பயன்படுத்தும் முக்கிய பாதைகளின் பட்டியலையும் அரச மலேசிய காவல்துறை விரைவில் வெளியிடும் என்று ஃபஹ்மி கூறினார்!
Sempena Sidang Kemuncak ASEAN 2025, Kementerian Pendidikan akan umum senarai sekolah terlibat PdPR bagi elak kesesakan lalu lintas. Sekolah berhampiran laluan utama dikenal pasti dan pelajar akan jalani PdPR sepanjang sidang berlangsung.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *