இந்தியர்களும் சீனர்களும் மலேசியாவுக்கு எப்படி வந்தீர்கள்? அம்னோ அச்சுறுத்து!

- Sangeetha K Loganathan
- 06 May, 2025
மே 6,
மலேசியா குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கானது அல்ல என ம.சீ.சவின் Roger Yapp Kah Chong தெரிவித்திருப்பது வரலாறு தெரியாதவரின் பிதற்றல் என நெகிரி செம்பிலான் மாநில இளைஞர் பகுதி தலைவர் Mohamad Fadil Md Zin தெரிவித்தார். மலேசியாவில் இப்போது குடியுரிமை பெற்றிருக்கும் இந்தியர்களும் சீனர்களும் எப்படி இந்த மலேசியாவுக்கு வந்தீர்கள் என்பதைப் பற்றி அம்னோ பேசுவதில்லை. அப்படி பேசினால் அது பெரும் சர்ச்சையாகும்.
அப்படியானச் சர்ச்சையைத் தான் ம.சீ.ச எதிர்பார்க்கிறதா என Mohamad Fadil Md Zin வினவினார். மலாய்க்காரர்கள், குறிப்பாக அம்னோவினர் அடிப்படையில் பிற சமூகத்துடன் நல்லிணக்கத்துடனும் சகிப்புத் தன்மையுடனுமே வாழ விரும்புகிறோம். ஆனால் மலாய்க்காரர்களின் உரிமைகள் குறித்தும் மலேசியாவின் பூமிப்புத்ராக்கள் குறித்தும் அதன் வரலாறு தெரியாமல் ம.சீ.சவின் Roger Yapp Kah Chong போன்றவர்கள் வாய்க்கு வந்ததை உளரும் போது அம்னோ அமைதியாக இருக்காது என நெகிரி செம்பிலான் மாநில இளைஞர் பகுதி தலைவர் Mohamad Fadil Md Zin தெரிவித்தார்.
Ketua Pemuda UMNO Negeri Sembilan, Mohamad Fadil Md Zin, membidas kenyataan Roger Yapp dari MCA, menegaskan bahawa UMNO tidak akan berdiam diri jika sejarah hak Bumiputera dipersoalkan, serta mengingatkan tentang asal-usul kaum Cina dan India di Malaysia.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *