அம்னோ தேர்தலுக்குத் தயார்! – அம்னோ உதவித் தலைவர் சூளுரை!

top-news

மே 5,

இப்போது தேர்தல் வந்தாலும் அம்னோ போட்டியிட தயாராக இருப்பதாக அம்னோ உதவித் தலைவரும் அமைச்சருமான Datuk Seri Mohamed Khaled Nordin தெரிவித்தார். அடிப்படையில் அம்னோ வலுவானக் கட்சி, அம்னோவைத் தெரியாதவர்கள் என யாரும் இல்லை. அரசியல் கட்சிகளில் பலமானக் கட்சியாக அம்னோ எப்போதும் இருந்து வரும் நிலையில் எப்போது தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள அம்னோ தயாராகவே இருக்கிறது என அவர் தெரிவித்தார்.

2027 ஆம் ஆண்டு ஜொகூர் மாநிலங்கவைக்கானத் தேர்தலுக்காக அம்னோ கூட்டணிகள் குறித்தானப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதாக வெளிவந்த செய்திகள் வெறும் வதந்தியே என Datuk Seri Mohamed Khaled Nordin விளக்கமளித்தார். ஆனால் ஜொகூர் மாநிலங்கவை தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தல் வந்தாலும் அம்னோ முழுமையாகவும் நம்பிக்கையுடனும் தேர்தலை எதிர்நோக்கும் சக்தியோடு எப்போதும் இருக்கும் என Datuk Seri Mohamed Khaled Nordin தெரிவித்தார்.

UMNO sentiasa bersedia untuk menghadapi pilihan raya pada bila-bila masa, tegas Timbalan Presiden UMNO, Datuk Seri Mohamed Khaled Nordin. Beliau menolak khabar angin berkaitan rundingan awal untuk PRN Johor dan menyatakan keyakinan terhadap kekuatan parti.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *